திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்
ADDED :2228 days ago
நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் அக்.28ல் கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா துவங்குகிறது. அன்று முதல் பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் துவங்குகின்றனர். மறுநாள் முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சி நடைபெறுகிறது. அக்.30ல் சிவ உபதேச திருக்காட்சியும், அதற்கு அடுத்த நாள் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், செப்.1ல் வேல் வாங்கும் திருக்காட்சி நடைபெறுகிறது. அக்.2ல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. செப்.3 அன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இந்து அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து
வருகின்றனர்.