உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

சாயல்குடி : -சாயல்குடி பேரூராட்சி பாண்டியன் ஸ்தலம் 14ல் நான்காவது ஸ்தலம் ஆப்பநாட்டில்448 கிராமங்களை உள்ளடக்கிய அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் செப்., 11ல் கும்பாபிஷேகம் நடந்தது.

45 நாட்கள் நிறைவு பெற்றதையடுத்த மூலவர்கள் விநாயகர்,அங்காள ஈஸ்வரி அம்மன், குருநாதர், முத்து இருளப்பசாமி, அக்னி வீரபுத்திர சுவாமி, பாலமுருகன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.புனித நீரில் அபிஷே ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனக்காப்புஅலங்காரத்தில் காட்சி தந்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்112வது ஜெயந்திவிழா, 57வது குருபூஜைமுன்னிட்டு முளைப்பாரி விழாவும் நடந்தது. சாயல்குடி தேவர் சிலைக்கு பால்குடம், முளைப்பாரி ஊர்வலமும், அன்னதானமும் நடந்தது. இன்று காலை கூட்டுப்பொங்கல் வைத்தும், முளைப்பாரி கங்கை சேர்த்தலும், இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது.ஏற்பாடுகளை சாயல்குடி முக்குலத்தோர் உறவின்முறையினர்,இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !