உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர்,நம்புதாளை பாலசுப்பிரமணியர் கோயில்களில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஏராளமானோர் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம்வழங்கபட்டது.*ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதி காலை முதல் பக்தர்கள் தீபங்கள் ஏற்றியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். ஆர்.எஸ். மங்கலம் அரசாளவந்த அம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !