உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி ராஜ காளியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

கன்னிவாடி ராஜ காளியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

கன்னிவாடி: அமாவாசையை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜ காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ஆலத்துாரான்பட்டி பார்வதி சமேத பரமேஸ்வரன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில். அம்பாத்துரை வீரபக்த ஆஞ்சநேயர் கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !