சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_99397_15243489.jpgசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_99397_152445602.jpgசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_99397_152452538.jpgசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் லட்சார்ச்சனைசென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சஷ்டியில் முருகப் பெருமான் சூரணை சம்ஹாரம் செய்ததை முன்னிட்டு, மகா கந்தசஷ்டியில் 6 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்று 6-வது நாள் சஷ்டி அன்று லட்சார்ச்சனை உச்சி காலத்துடன் பூர்த்தி அடையும். அன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் . 7-ம் நாள் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் புறப்பாடும் நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகனுக்கு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.