திண்டுக்கல் கோயில்களில் தீபாவளி சிறப்பு பூஜை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தீபாவளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் வெள்ளை விநாயகர், 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர் கோயில், கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மாதா புவனேஸ்வரி அம்மன், பத்ரகாளியம்மன்,மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோயில்களில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* சின்னாளபட்டி: செட்டியபட்டி சித்ரலேகா சமேத குபேரர், மகாலட்சுமி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பரிவார மூர்த்திகளான குபேர கணபதி, குபேர லிங்கத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மூலவருக்கு, திரவிய அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது.* கன்னிவாடி: அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவ ருக்கு திரவிய அபிஷேகத்துடன், வெண்ணைய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜை கள் நடந்தது.* கசவனம்பட்டி: மவுனகுரு சுவாமி கோயிலில், 30 வகை திரவிய அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மூலவர், உற்சவர், நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.