இலக்கு நோக்கி விரைவீர்!
ADDED :2206 days ago
ஓட்டப்பந்தயம் ஒன்றில் வீரன் ஒருவனும், இளவரசன் ஒருவனும் பங்கேற்றனர். தொடக்கத்தில் இருவரும் சமமாக ஓடினர். ஒரு கட்டத்தில் இளவரசன் களைப்படைந்தான். ஆனால் பந்தயத்தில் தோற்பதை இளவரசன் விரும்பவில்லை. அதனால் வீரனைத் திசை திருப்பும் விதமாக தங்க ஆப்பிள் ஒன்றை உருட்டி விட்டான். அதை எடுக்க விரும்பிய வீரனுக்கு கவனம் தடுமாறியது. இதற்கிடையில் இளவரசனும் வேகமாக ஓடி இலக்கை நெருங்கினான்.
மனித வாழ்வும் ஓட்டப்பந்தயம் போலத் தான். சலனத்திற்கு இடம் கொடுத்தால் நம் எதிர்கால முன்னேற்றம் தடைபடும். அதனால் நிர்ணயித்த இலக்கு நோக்கி வீறுநடை போடுங்கள்