பழநி கோயில் பதினெட்டு நாள் காணிக்கை: ரூ.3.5 கோடி
ADDED :2164 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் 18 நாட்களில் ரூ.3.5 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. பழநி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது.
இதில் தங்கம் 640 கிராம், வெள்ளி 8,500 கிராம், ரொக்கம் ரூ.3 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 620, வெளிநாட்டு நாணயங்கள் 536 கிடைத்தது. இணை ஆணையர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், அனிதா, கணக்கு அலுவலர் மாணிக்கவேலு, மேலாளர் சந்திரசேகர், தொடர்பாளர் கருப்பணன், வங்கி ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த 18 நாட்களில் சஷ்டி விழாவையொட்டி 2 நாட்கள் நடையடைப்பு இருந்தது. இருப்பினும் இந்தளவு காணிக்கை கிடைத்தது இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.