உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்டுங்கள் திறக்கப்படும்

தட்டுங்கள் திறக்கப்படும்

கேட்டது கிடைக்கவில்லை...நினைத்தது நடக்கவில்லை என பலரும் வருந்துகிறார்கள். இதற்கு காரணம் பயம். பைபிளில், நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது” என சொல்லப்பட்டுள்ளது. முதலில் நம்பிக்கை வேண்டும்.  ஆண்டவரால் துன்பமே அருளப்பட்டாலும் கூட அதுவும் நன்மைக்கே என ஏற்கும் பக்குவம் வேண்டும். இரண்டாவது பாவச்செயல்கள். செய்த பாவங்களுக்காக பாவ மன்னிப்பு கேட்ட பிறகு, மீண்டும் பாவத்தின் பக்கம் செல்வது கூடாது. அப்படி பாவம் செய்பவனின் கோரிக்கையை ஏற்க மாட்டார். ஒழுக்கமின்மை, புகை, மது, மாது ஆகியவைகளை வைத்துக்கொண்டு, எந்த கோரிக்கை வைத்தாலும் ஒழுக்கமின்மையை காரணம் காட்டி ஏற்க மாட்டார்.  நல்ல எண்ணம் கொண்டவர்களின் கோரிக்கை மட்டுமே சன்னிதானக் கதவைத் திறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !