தந்திரக்கார வியாபாரி
பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். '5 பழம் 10 ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். யாரும் பழம் வாங்க வரவில்லை. முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ' 6 பழங்கள் 10 ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!மற்றொரு பேருந்திலும் இதே போல் நடக்க அந்த இளைஞனுக்கு எல்லா பழங்களும் விற்பனையானது. இதை பார்த்துக் கொண்டிருந்த விற்பனை ஆலோசகர் ஒருவர், அவரிடம் இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் 6 பழம் 10 ரூபாய் என்று விற்றால் தானே உமக்கு விற்பனை ஆகும் என தனது ஆலோசனையை சொன்னார்.முதியவர் சிரித்தபடி, அவன் என் மகன். அவனது யோசனை படி தான் பழ வியாபாரம் நடக்குது. மக்கள் மனதினை புரிந்து கொண்ட தந்திரக்கார வியாபாரி சார் அவன் என்றார் முதியவர். வாய்ப்புகள் இல்லையென்றால் கவலைபடாதே. உருவாக்கி கொள் என்கிறது தேவ மொழி.