உள்ளூர் செய்திகள்

கேட்காமல் கிடைத்த பாடம்

மக்களின் குறைகளை சரி செய்வதை பணியாக கொண்டவர் எல்லீஸ். ஒரு நாள் வரிசையில் தன் ஆசிரியரை பார்த்தார். ஓடிச் சென்று உங்களிடம் படித்தவன் தான் நான். தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டார். அவரோ நீ என் மாணவன் என்பதில் பெருமை தான். ஆனால், முன்னால் இருப்பவர்களிடம் மனுவை பெறாமல் அவர்களுக்கு பின்னால் வந்த எனக்கு முன்னுரிமை கொடுப்பதை விரும்பவில்லை என்றார் ஆசிரியர். உதவியாளரோ செல்வாக்கை பயன்படுத்தி அவருக்கு நாம் யார் என்பதை காட்டுவோம் என காதோரமாக சொன்னார். அதற்கு அவர் ''மனுக்களை வாங்க பாரபட்சம் காட்டாதே, எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அவருக்காக பிறருடைய உரிமையை பறிக்காதே'' என கேட்காமலே தற்போது எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் எப்போதுமே எனக்கு ஆசிரியர் தான் என்றார். அவரின் குணத்தை பார்த்து வியந்தார் உதவியாளர்.