உள்ளூர் செய்திகள்

சிறிய தொண்டுக்கும் பெரிய பலன்!

ஒரு மாணவன் படிப்பில் முதலிடம் பெற்றால், நிர்வாகம் அவனைக் கவுரவப்படுத்தும். சுதந்திர தினத்தில் தியாகிகளை அரசாங்கம் கவுரவப்படுத்தும். நன்றாக பணிசெய்யும் ஊழியர்களை தொழிற்சாலை முதலாளி கவுரவப்படுத்துவார். ஆனால், ஆண்டவரே, நம்மைக் கவுரவப்படுத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?இதற்கு இயேசுநாதர் பதிலளிக்கிறார்.''ஒருவன் எனக்கு ஊழியம் செய்வானானால் அவனை பிதாவானவர் கனம் பண்ணுவார்'' என்கிறார் அவர்.தாமஸ்மூடி என்ற போதகர் இங்கிலாந்தில் இருந்தார். ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் இவரதுசொற்பொழிவு நடக்காத இடமே இல்லை என்ற அளவுக்கு பெயர் பெற்றார். அவர் போதகர் ஆகும் முன் செய்த பணி என்ன தெரியுமா? விடுமுறை வேதாகமப் பள்ளிக்கு (வி.பி.எஸ்) குழந்தைகளை வீடு வீடாகச் சென்று அழைத்து வந்தது தான். இந்த சிறிய பணிக்காக, தேவன் அவரை மிகப்பெரிய போதகர் ஆகும் அளவுக்கு உயர்த்தி உலகமறியச் செய்தார்.தனக்கு சிறு ஊழியம் செய்கிறவர்களையும், ராஜாதிராஜாவான பிதா மிகுந்த கனம் பண்ணுவார் என்பது இதில் இருந்து தெரிகிறதல்லவா?