உள்ளூர் செய்திகள்

உண்மையான நண்பர்

ஒரு சிறைக்கூடத்தில் பல கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து ஒரு கைதி தப்பினால், 10 பேரை பட்டினி போட்டு கொன்று விடுவர். இப்படி செய்தால், கைதிகள் தப்ப நினைத்தாலும், மற்றவர்கள் அவனை காட்டிக் கொடுத்து விடுவர்கள் என சிறை துறையினர் நம்பினர். ஒருமுறை ஒரு கைதி யாருக்கும் தெரியாமல் தப்பி விட்டான். சிறை நிர்வாகம் 10 பேரை தேர்ந்தெடுத்து ஒரு அறையில் தள்ளியது. அதில் ஒருவன் மட்டும் குடும்பஸ்தன். தன் மரணத்துக்குப் பிறகு மனைவி, பிள்ளைகள் சிரமப்படுவார்களே என புலம்பினான்.அங்கு ஒரு மதகுருவும் சிறையில் இருந்தார். அவர் அதிகாரிகளிடம் சென்று, 'குடும்பஸ்தனான அந்தக் கைதிக்கு பதிலாக என்னை பட்டினி போட்டுக் கொல்லுங்கள். அவனை விடுவியுங்கள்,” என கேட்டார். அதிகாரிகளும் அதை ஏற்று அவர் பட்டினியாய் கிடந்து இறந்தார். முன்பின் தெரியாதவர்களாயினும், யார் ஒருவர் பிறருக்காக உயிரையும் கொடுக்கத் துணிகிறாரோ, அவரே உண்மையான நண்பர். ஆண்டவர் மக்களுக்காக உயிரைக் கொடுத்து அவர்களின் நண்பனாக விளங்கினார்.