பணத்தாசை
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
இளைஞர்களான ஈதன், லுாக்கா இருவரும் காட்டு வழியே நகரத்திற்கு சென்றனர். வழியில் ஈதன் கால்களில் பொட்டலம் ஒன்று தட்டுப்பட்டது. அதை கையில் எடுத்தான் லுாக்கா. கண்ணைப் பறிக்கும் வைரங்கள் மின்னின. சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் என்றான் ஈதன். லுாக்காவும் சம்மதித்தான். ஆனால் ஒரே ஒரு வைரக்கல் மிஞ்சியது. 'எனக்கே சொந்தம்' என இருவரும் விவாதம் செய்தனர். அது சண்டையானது. அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்து லுாக்காவின் தலையில் போட்டான் ஈதன். அப்போது காற்று பலமாக வீச, மரக்கிளையில் சிக்கிய விஷ அம்பு ஒன்று ஈதனின் முதுகில் பாய்ந்தது. பணத்தாசை கொண்ட இருவருமே பலியாயினர்.