உள்ளூர் செய்திகள்

எங்கே மகிழ்ச்சி

விவசாயி ஒருவரின் தோட்டத்தில் விளைச்சல் அமோகமாக இருந்தும், அவர் சோகமாக இருந்தார். அதற்கான காரணத்தை நண்பர் கேட்டதற்கு,'என் தோட்டத்தில் விளையும் சொத்தையான காய்கறிகளை மட்டுமே பன்றிகளுக்கு கொடுப்பேன். இப்போது நல்ல காய்கறிகள் வந்திருச்சே. என்ன செய்வது' என அப்போதும் வருத்தப்பட்டார். மகிழ்ச்சியான தருணங்களை இவரைப் போலவே சில மனிதர்கள் ரசிப்பதில்லை. காரணம் கேட்டால் 'எதுவும் சரியில்லை' என குறைபட்டுக் கொள்வர். இப்படி உள்ளவர்களுக்கு குறை மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே மகிழ்ச்சி.