தடையா...
UPDATED : டிச 13, 2024 | ADDED : டிச 13, 2024
போலந்து நாட்டைச் சேர்ந்த மேரி கியூரி இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர். ரஷ்யாவின் பிடியில் இந்நாடு இருந்த போது பள்ளி, கல்லுாரிகளில் போலியமொழியில் பாடங்கள் நடத்துவது தடைச்செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தன் தந்தையிடம் தாய்மொழியில் பாடங்களை கற்றார். பள்ளிகளில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். ஏழ்மை நிலையிலும் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றார். கதிரியக்க ஆய்வுப்பணிகளில் முத்திரை பதித்து வெற்றியும் கொண்டார். வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கு எல்லாம் துவளாதீர்கள். சாதனையாளர்களின் சரித்திரத்திற்கு பின்னால் ஏட்டில் எழுதமுடியாத சோதனைகள் நிரம்பி இருக்கும். தடையா! அதை உடைத்து எறி, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதை மனதில் உறுதி கொள்.