அறிவுக்கு வேலை கொடு
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
கல்லுாரியின் இறுதி நாளன்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார் தலைமை பேராசிரியர். ''உங்களுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு படிப்பு உதவும். இருந்தாலும் 'அனுபவம்' என்னும் வாழ்க்கை பாடத்தை இனி மேல் தான் நீங்கள் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். இதுவரை பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பாக வாழ்ந்து விட்டீர்கள். வாழ்க்கை என்பது போராட்டமா இல்லை பூந்தோட்டமா என்பதை நீங்கள் உணரும் காலம் நெருங்கி விட்டது. பணக்காரர், பதவியில் இருக்கும் ஒருவர் குருவியை சுட்டாலும் அவரை பாராட்ட பலரும் முன் வருவார்கள். ஆனால் ஏழை ஒருவர் புலியுடன் சண்டையிட்டு உயிருடன் திரும்பினால் கூட வரவேற்க ஆள் இருக்காது. உணர்ச்சி வசப்படாதீர்கள். அறிவுக்கு வேலை கொடுங்கள். சிந்தித்து செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்' என்றார்.