உள்ளூர் செய்திகள்

பேராசை

கழுகு ஒன்று ஆட்டுக்குட்டியை தன் கால்களால் துாக்கிச் சென்றது. இதைப் பார்த்த காகம் ஒன்று, 'நானும் இதைச் செய்வேனே' என உயரப் பறந்தது. பின் சிறகுகளை விரித்துக் கொண்டு புல்லை மேய்ந்தபடி நின்ற செம்மறி ஆட்டின் மீது பாய்ந்தது. ஆனால் ஆட்டின் உரோமத்தில் காகத்தின் நகங்கள் சிக்கிக் கொண்டன. என்ன செய்தும் சிக்கிய கால்களை எடுக்க முடியவில்லை. அங்கு நின்ற சிறுவன் அந்த காகத்தைப் பிடித்து நண்பர்களிடம் வேடிக்கை காட்டினான். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதால் நேர்ந்த விளைவு இது.