ஒளிமயமான எதிர்காலம்
UPDATED : ஜூன் 20, 2025 | ADDED : ஜூன் 20, 2025
பிறந்தநாள், திருமணம் என யார் வீட்டில் எது நடந்தாலும் நிக்கோலஸ் நிச்சயம் இருப்பான். முடிந்த உதவிகளைச் செய்வான். ஆனால் அவனையும் சிலர் குறை சொல்லி மகிழ்ந்தனர். தன் பள்ளி ஆசிரியரிடம் இது பற்றி சொல்லி கவலைப்பட்டான். உண்மையை உணர்த்த எண்ணிய அவர், ''குறை சொல்பவருக்கு இங்கு என்ன சிலையா வைப்பார்கள்... இல்லையே! அவர்களை நீ பொருட்படுத்தாதே. தொண்டு செய்பவருக்கே மக்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும்'' என்றார். நல்லவர்கள் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியாக எதிர்காலத்தில் ஜொலிப்பர்.