தண்ணீர் நிரப்புங்கள்
UPDATED : ஜூன் 20, 2025 | ADDED : ஜூன் 20, 2025
கலிலேயாவில் உள்ள கானா என்னும் ஊரில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு இயேசு சீடர்களுடன் சென்றார். அங்கே அவரது தாய் மரியாளும் வந்தார். யூத முறைப்படி தாகம் தீர்க்க திராட்சை ரசம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதிகமானோர் பங்கேற்றதால் திராட்சை ரசம் போதுமானதாக இல்லை. இன்னும் நிறைய பேருக்கு தர வேண்டியிருப்பதை அறிந்த மரியாள் தன் மகனிடம் விஷயத்தை சொன்னார். உடனே திருமண வீட்டாரிடம், 'இங்குள்ள ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்றார் இயேசு. ' இதில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் திராட்சை ரசத்தை தாராளமாக வழங்கலாம்' என்றார். அவர்களும் அப்படியே செய்தனர். தண்ணீர் முழுதும் திராட்சை ரசமாக மாறி இருந்தது. இதுவே ஆண்டவர் செய்த முதல் அற்புதம்.