அகத்தின் அழகு
ஆண்டவர் மீது பக்தியும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டவர் சாமுவேல். நீதிமானான இவர் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தலைவராக இருந்தார். வயதான பிறகு தன் மகனான இஸ்ரயேலை தலைவராக ஆக்கினார். ஆனால் அவரோ பொறுப்பற்றவராக இருந்தார். இதனால் மனம் வருந்திய சாமுவேல், 'இஸ்ரயேல் மக்களுக்கு நல்ல மன்னரைத் தாரும்' என மன்றாடினார். இந்நிலையில் அண்டை நாட்டைச் சேர்ந்த பெலிஸ்தியர்கள் அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். சவுல் என்பவன் மூலம் அவர்களின் துன்பத்தை போக்கினார் ஆண்டவர். இதற்குப் பின்னர் சவுல் கர்வமுடன் நடந்து கொண்டான். இதைக் கண்ட சாமுவேல் மீண்டும் மன்றாடினார். 'பெத்லகேமில் உள்ள ஈசாய் என்பவரிடம் போ. அவரது மகன்களில் ஒருவரை அரசனாகத் தேர்ந்தெடு' என தெரிவித்தார். அங்கு ஈசாவின் மகன்களில் ஒருவனான எலியாவைக் கண்டதும், ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இவன் தான் என கருதினார் சாமுவேல். அப்போது ஆண்டவர், 'ஒரு மனிதனின் தோற்றம், உயரத்தை பார்க்காதே. புறத்தோற்றத்தை பார்த்தால் மட்டும் போதாது. அகத்தின் அழகை பார். ஈசாவின் கடைசி மகனும், ஆடுமேய்க்கும் சிறுவனும் ஆன தாவீது அரசனுக்குரிய தகுதி கொண்டவன்'' என்றார் ஆண்டவர்.