உள்ளூர் செய்திகள்

நல்ல படிப்பினை

சாலமனின் தந்தை தாவீது ஆலயம் கட்ட உத்தரவிட்டார். அதை ஏற்று சாலமனும் கட்டி முடித்தார். அவரது சேவையைக் கண்டு மகிழ்ந்த ஆண்டவர், “சாலமனே! உன் தந்தையைப் போல் நீயும் தர்மத்தின் பாதையில் நடந்தால் உன் அரசாட்சி அழியாது. ஆனால் நீயோ, உன் மக்களோ என்னைப் புறக்கணித்தால் இஸ்ரவேல் நாடு பூமியிலிருந்தே அழிந்து போகும்” என எச்சரித்தார். காலம் ஓடியது. செல்வச்செருக்கு, புத்திசாலித்தனம், ஆணவம் எல்லாம் சேர்ந்து அவரது மனதை மாற்றின. கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் விரும்பி திருமணம் செய்தார். மக்கள் மீது கடும்வரி விதித்தார். சுகபோகத்தில் நாட்டம் கொண்டார். மக்கள் அவரை வெறுக்க ஆரம்பித்தனர். இதையறிந்த பகைவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டைக் கைப்பற்றினர். நாடு அவரின் கண் எதிரிலேயே துண்டு துண்டானது. அதைக் கண்டு மனம் நொந்து உயிர் நீத்தார் சாலமன். மக்கள் எப்படி வாழ வேண்டும் என 3000 நீதி மொழிகளைச் சொன்ன அவர் அதில் ஒன்றைக் கூட பின்பற்றவில்லை. சாலமனின் வாழ்க்கை ஆணவம் கொண்டோருக்கு நல்ல படிப்பினை.