உள்ளூர் செய்திகள்

மேலானதை சிந்திப்போம்

ஒரு பள்ளியில் கணக்கு தேர்வு முடிந்து விடைத்தாள் கொடுத்தனர். ஒரு மாணவன் பேப்பரை வாங்கியவுடன் அழ ஆரம்பித்தான். “ஏண்டா அழுகிறாய். நீ தான் கணக்கில் 96 மார்க் வாங்கி இருக்கியே! சந்தோஷப்படக் கூடாதா” என்றனர் சக மாணவர்கள்.“அட போங்கடா! எனக்கு மேலே நாலு பேர் 97, 98, 99, 100 என வாங்கி இருக்காங்க” என வருத்தப்பட்டான் அவன். இன்னொரு மாணவன் சிரித்துக் கொண்டிருந்தான்.அவனிடம் சென்ற மாணவர்கள் “டேய்! நீ வாங்கியிருப்பதே நாலு மார்க். இதில் என்னடா சிரிப்பு?” என்றனர்.“அட போங்கடா! எனக்கும் கீழே 3,2,1,0 என நான்கு பேர் மார்க் வாங்கியிருக்கிறார்களே. அவர்களை விட நான் உசத்தி தானே? அதனால் சிரிக்கிறேன்” என்றான்.மாணவர்கள், மேலான விஷயங்கள் பற்றியே சிந்திக்க வேண்டும். முதல் மாணவன் தன் முயற்சியின்மைக்காக அழுகிறான். அடுத்த மாணவன் தன் தோல்வியை மறைக்கச் சிரிக்கிறான்.“மேலானவைகளைத் தேடுங்கள்” என்கிறது பைபிள். மனிதனின் புத்தி தலைகீழாக சிந்திக்கக் கூடாது. முன்னேற்றம் குறித்தே சிந்திக்க வேண்டும்