வாய்ப்பு
UPDATED : அக் 07, 2025 | ADDED : அக் 07, 2025
சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான பேச்சும், நடத்தையும் மனதைக் கவர்ந்தது. தங்களுடன் வருமாறு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவருக்காக உணவு தயாரிக்க ஆரம்பித்தாள் கியூரி. அவருடன் மேரி பேசிக் கொண்டிருந்தாள். நேரம் கடந்ததால் கியூரி, 'எனக்கு உதவியாக மேரி வரட்டும்' என்றாள். அதற்கு பெரியவர், 'நல்ல விஷயங்களைப் பற்றி பேசவும், கேட்கவும் ஆண்டவர் வாய்ப்பு அளித்திருக்கிறார். எனக்கும் எளிய உணவு போதும். அதுவும் அவசரமில்லை. பொறுமையாக தயாரிக்கலாம்' என்றார். எப்போதும் நல்லதையே சிந்தியுங்கள்.