உள்ளூர் செய்திகள்

பலன் உண்டு

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று சமாதானக் கூட்டம் நடத்தச் சென்றார். ஆனால் இதற்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் அவரது கருத்தை ஏற்கவில்லை. நாடு திரும்ப முடிவு செய்து தன் நண்பரான போதகர் ஒருவரிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், “'பணி சிறக்க வேண்டும் எனக் கண்ணீருடன் வேண்டிக் கொள்ளும். ஆண்டவர் உன் பிரார்த்தனையை ஏற்பார்” என்றார். ஊழியரும் தீவிரமாக பிரார்த்தனை செய்தார். அதன்பின் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டது. அவர்களின் மனதில் அமைதியும், சமாதானமும் உண்டானது. உருக்கமான பிரார்த்தனைக்கு பலன் உண்டு.