உள்ளூர் செய்திகள்

நல்ல பழக்கம்

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 'புத்தகம் படிப்பது அல்லது பொழுது போக்குவது... இதில் எதை விரும்புகிறீர்கள்' என கேள்வி கேட்கப்பட்டது. மூன்றில் ஒரு பங்கினர் புத்தகம் படிப்பதாலும், மற்றவர்கள் பொழுது போக்குவதாலும் திருப்தி அடைவதாக கூறினர். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். 'ஒரு நண்பர் செய்வதை புத்தகத்தின் ஒரு பக்கம் செய்யும்' என்பது பழமொழி. போர் புரிவதில் எப்போதும் நேரத்தை செலவழித்த மன்னர் அலெக்சாண்டர் இரவு நேரத்தில் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். புத்தகம் படித்தால் நல்ல மனிதனும், நல்ல சமுதாயமும் உருவாகும்.