வெள்ளி வியாபாரி
UPDATED : அக் 17, 2025 | ADDED : அக் 17, 2025
வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, தன்னிடம் இருந்த 48 கிலோ எடை கொண்ட பழைய சாமான்களை 50 கிலோ என அவரிடம் கொடுத்தாள். அவரும் எடை போட்டு பார்த்து 2 கிலோ குறைவதாக சொன்னார். அவள் கறாராக ' எனக்கு மூவாயிரமா தாங்க' என பிடிவதாம் செய்தாள். வேறு வழியின்றி அவரும் கொடுக்க சாதித்தது போல மகிழ்ந்தாள் அமலா. மாலையில் மீண்டும் வீட்டுக்கு வந்து, 'அம்மா நீங்க கொடுத்த சாமானில் அழுக்கடைந்த வெள்ளி டம்ளர் ஒன்று இருந்தது எனச் சொல்லி அதை கொடுத்து விட்டுச் சென்றார். பழைய பாத்திரமாக தன் மனம் இருப்பதையும், ஜொலிக்கும் வெள்ளியாக வியாபாரியின் மனம் இருப்பதையும் நினைத்து கண்ணீர் சிந்தினாள் அமலா.