யாருக்கு சிலை
UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025
மலை அடிவாரத்தில் உள்ள தன் நிலத்தில் நின்றிருந்தார் விவசாயி ஜாக்சன். அங்கிருந்து பார்த்தால் அவரது தாழ்வான கிராமமும், அருகிலுள்ள கடலும் தெரியும். ஒருநாள் நிலத்தில் இருந்த போது. நில அதிர்வு ஏற்படப் போகிறது என உணர்ந்தவுடன் சர்ச் மணியை பலம் கொண்ட மட்டும் அடித்தார். ஆங்காங்கே இருந்த மக்கள் சர்ச்சை நோக்கி ஓடி வந்தனர். சற்று நேரத்தில் ராட்சத அலையால் கிராமமே மூழ்கியது. உயிர் பிழைத்த மக்கள் நம் ஊர் அரசியல்வாதியை போல தங்களை காப்பாற்றிய விவசாயிக்கு சிலை வைக்க விரும்பினர். பதறிப் போன அந்த விவசாயி, 'எனக்கு சிலை வைப்பதாலோ, அதற்கு விழா கொண்டாடுவதாலோ யாருக்கு லாபம்? அடுத்தவருக்கு உதவி செய்யத்தான் ஆண்டவர் நம்மை படைத்திருக்கிறார். இதுவே உண்மையான விசுவாசம்' என்றார் நெத்தியடியாக ஜாக்சன்.