உள்ளூர் செய்திகள்

தவறான புரிதல்

ஒரு தவளையின் முன்னங்காலை வெட்டினான் சிறுவன் ஒருவன். அது வேதனையால் துடித்தது. பின்னர் பின்னங் காலையும் வெட்டி விட்டு அதை தாவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். கால்கள் இல்லாத தவளை எப்படி தாவும்? ஆனாலும் அவன் 'தாவு... தாவு...' என சொல்லியபடி குச்சியால் குத்தினான். என்ன செய்தும் அது அசையவில்லை. கடைசியில் அதற்கு காது கேட்கவில்லை என முடிவுக்கு வந்தான். அப்போது அங்கு வந்த அவனது தந்தை 'இப்படி இம்சை செய்யலாமா' என தண்டித்தார். இப்படித்தான் மனிதர்களில் சிலர் தவறான புரிதலால் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்கின்றனர்.