உள்ளூர் செய்திகள்

ஆயிரத்தில் ஒருவனா நீங்கள்

இரண்டு சிறுவர்கள் ஆற்றங்கரையில் விளையாடி கொண்டிருந்தார்கள். ஒருவனுக்கு வயது ஆறு, இன்னொருவனுக்கு பத்து. பத்து வயது சிறுவன் ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும்போது ஆற்றில் உள்ள பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் அவனால் வெளியே வரமுடியவில்லை. இதைப்பார்த்த மற்றொருவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அருகில் இருந்த கயிற்றை எடுத்து ஆற்றில் வீசி நண்பனை காப்பாற்றினான். சிறுவயதில் எப்படி இப்படி தைரியம் வரும் என்று நினைக்கிறீர்களா... அதற்கு காரணம் அவனால் அதைச் செய்ய முடியாது என்று அவனிடம் யாரும் சொல்லவில்லை. இதுதான் நமது செயல்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. 'உன்னால் இது முடியாது, இது உனக்கு கிடைக்காது' என பலர் நமக்கு எதிர்மறையாகவே சொல்லிக் கொடுக்கின்றனர். அது மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அதனால் பத்தோடு பதினொன்றாக நாம் ஆகிறோமே தவிர, ஆயிரத்தில் ஒருவனாக மாறுவதில்லை. எதிர்மறை எண்ணத்தை நீக்கினால் நீ ஆயிரத்தில் ஒருவனாக மாறுவாய்.