தைரியமாக இருங்க...
சில நாட்களாக தன் மகள் சோகமாக இருப்பதை கண்ட டேவிட், அவளிடம் என்ன விஷயம் எனக் கேட்டார். அலுவலகத்தில் புதிது புதிதாக பிரச்னை உண்டாவதால் என்னால் சமாளிக்க முடியவில்லை என சொன்னாள். அவளை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்கு சென்றார். அங்கிருந்த அடுப்புகளை பற்ற வைக்க சொல்லி மூன்று பாத்திரத்தில் சமஅளவு தண்ணீரை ஊற்றி ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கும் மற்றொன்றில் முட்டையும், இன்னொன்றில் காபி கொட்டைகளையும் போடச் சொன்னார். அரை மணிநேரம் கழித்து உருளைக்கிழங்கு, முட்டை அவிந்து இருந்தன. ஆனால் முட்டையின் வெளிப்புறம் திடமாக இருந்தன. காபி கொட்டையோ அதன் நிறத்தையே மாற்றி விட்டது பார்த்தியா... அது போலத்தான் பிரச்னையும். முதலில் உள்வாங்கி கொள். பின் அதை சரி செய்ய முயற்சி செய் என்றார் தந்தை. அதைக்கேட்ட அவளுக்கு மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டானதை அவரால் உணர முடிந்தது.