உள்ளூர் செய்திகள்

சாந்தமாக இருங்கள்!

'நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?'' என்று பைபிளில், யோனா அதிகாரம் 4ல் 9ம் வசனம் அமைந்துள்ளது. யோனா என்பவர் மிகவும் எரிச்சல் உள்ளவராக இருந்தார். அவர் ஒரு ஆமணக்கு செடியின் நிழலில் படுத்து உறங்குவது வழக்கம். ஒருநாள் செடியைப் பூச்சி அரித்திருந்ததைக் கண்டார். தனக்கு இடம் கொடுத்த அந்தச் செடி கூட அழியும் நிலைக்கு வந்துவிட்டதால் விரக்தியடைந்த யோனா எரிச்சலுடன், 'நான் வாழ்வதை விட சாவதே நலமாக இருக்கும்,'' என்றார். இவரைப் போலவே பலரும். ஒரு சிலர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் மனைவி, குழந்தைகளிடம் எரிச்சல்படுவார்கள். கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் தூக்கி எறிவார்கள். காயீன் என்பவன், கர்த்தருக்கு காணிக்கை ஒன்றைக் கொடுத்தான். ஆனால் அதை அவர் அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட எரிச்சலால் தன் சொந்த சகோதரனையே கொலை செய்துவிட்டான். இதனால் அவன் பல சாபங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்று. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக எரிச்சல் கூடாது. கஷ்டமான நேரத்திலும் சாந்தமாக இருக்கப் பழக வேண்டும்.