சொல்லலாமா... கூடாதா!
UPDATED : பிப் 20, 2023 | ADDED : பிப் 20, 2023
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர். ''பொய் சொல்லக்கூடாது என வேதம் சொல்லியுள்ளது புரிகிறதா'' என மாணவர்களிடம் கேட்டார். அனைவரும் ஆமாம் என தலை அசைத்தனர். வீட்டிற்கு செல்லும் சமயத்தில், நாளை கல்விஅதிகாரி வருகிறார். அவர் ஏன் இவ்வகுப்பறையில் நீங்கள் குறைவாக உள்ளீர்கள் என கேட்டால், ''வராதவர்களுக்கு விஷக்காய்ச்சல்'' என சொல்லுங்கள் என்றார் ஆசிரியர். குறும்புக்கார மாணவன் ஒருவன், என்னடா இது பொய் சொல்லாதீர்கள் என பாடம் நடத்தி விட்டு இப்போது பொய் சொல்லுங்கள் என்கிறாரே என நண்பர்களிடம் சொல்லி சிரித்தவாறு சென்றான். இதைக்கேட்ட ஆசிரியரின் முகமே மாறியது.