நல்ல தலைவரை தேர்ந்தெடுங்கள்
UPDATED : ஆக 04, 2023 | ADDED : ஆக 04, 2023
கொடியவன் ஒருவன் அதிபர் லிங்கனை சுட்டு வீழ்த்தினான். உயிரற்ற அவரது உடல் சொந்த ஊரான எலினாவிற்கு திறந்த வெளி வண்டியில் கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அக்கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு யாரும் வழிவிடவில்லை. இருந்த இடத்திலே நின்று கொண்டு தலைக்கு மேலே தன் மகனை துாக்கி 'இதோ பார் உனக்காக போராடிய தலைவர், உயிர் விட்டார். இனி இவரை போல ஒரு தலைவரை பார்க்க முடியாது' என சொன்னார்.தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது நல்லவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டும் கூட்டத்தில் இருந்தோருக்கு புரிந்தது.