கண்டுபிடிப்பது சிரமம்
UPDATED : மார் 27, 2023 | ADDED : மார் 27, 2023
ஆய்வகத்தில் இருந்து வீட்டிற்கு தாமதமாக வந்தார் எடிசன். அவரது மனைவியோ இப்படி ஆய்வு,ஆய்வு என்று இருக்கிறீர்களே இந்த உலகத்தையே மறக்கும் இடத்திற்கு சென்று ஓய்வெடுத்து வாருங்களேன் என்றார். சரி நாளை நாம் இருவருமே நமது ஆய்வுக்கூடத்திற்கு செல்லலாம் என்றார். தனது கணவனின் சிரத்தையான பதிலைக் கேட்டு மனத்திற்குள் மகிழ்ந்தாள். கண்ணுக்கு தெரியாமல் தற்காலத்திலும் வேலை வேலை என்பவர்கள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன அவர்களை தேடி கண்டு பிடிப்பது தான் சிரமம்.