உள்ளூர் செய்திகள்

கடமை... அது கடமை!

டேவிட் என்பவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தந்தை சொல் தட்டாதவன். இளையவனோ தன் சொத்தை வாங்கிக்கொண்டு, நண்பர்களுடன் கூத்தடித்தான். நாளடைவில் சொத்தையும் காணோம். நண்பர்களையும் காணோம். இதனால் பக்கத்து ஊருக்கு சென்று, பன்றி மேய்க்கும் வேலையை செய்தான். இருந்தாலும் அவன், 'என் தந்தையிடம் வேலை பார்ப்பவர்கள்கூட, நிம்மதியாக இருக்கின்றனர். நான் அப்படி இல்லையே' என வருந்தினான். ஒருநாள் தன் தவறை உணர்ந்து, தந்தையிடம் சென்று மன்னிப்பும் கேட்டான். சந்தோஷம் அடைந்த அவர், உயர்ந்த ஆடைகள், தங்க மோதிரத்தை கொடுத்து விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்நேரம் பார்த்து மூத்த மகன் வீட்டுக்கு வந்தான். நடப்பதைக் கண்டு வருந்தி, ''சொத்தை அழித்தவனுக்கு வரவேற்பு கொடுக்கிறீர்களே? எனக்கு ஏதாவது கொடுத்ததுண்டா'' என கேட்டான். ''மகனே! இந்த சொத்து முழுவதும் உன்னுடையதே. உன் தம்பி இப்போதுதான் திருந்தியுள்ளான். அவனை அரவணைப்பது நம் கடமை'' என்றார் தந்தை.