உள்ளூர் செய்திகள்

நல்லவர்களுக்கு காலம் இல்லை

காடு ஒன்றில் பஞ்சம் தலைவிரித்தாடியது. காட்டிற்கு ராஜாவான சிங்கம் தன் உதவியாளரான நரியிடம் காரணம் கேட்டது. இதற்கு நரி, 'அதிகமான பாவம் செய்தால் மழை பெய்யாது என மனிதர்கள் சொல்வார்கள். நம்மில் யாரோ பாவம் செய்துள்ளார்கள்' என்றது. சிங்கம் உடனே அதிக பாவம் செய்தது யார் என அனைவரையும் விசாரித்தது. இதற்கு ஒவ்வொரு பிராணியும் தாங்கள் செய்த பாவங்களை பட்டியலிட்டன. கடைசியில் மான் ஒன்று, 'விவசாயிக்கு தெரியாமல் அவரது தோட்டத்தில் பயிர்களை மேய்ந்தேன்' என்றது. உடனே எல்லா விலங்குகளும், 'நீ செய்ததுதான் மிகப்பெரிய பாவம்' என அதைக் கொன்றன. இதில் இருந்து தெரிந்து கொள்வது ஒன்றுதான். யாரிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்ல வேண்டும்.