பேராசை
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
ஒரு ஏழையின் சிரிப்பைக் காண ஆண்டவர் விரும்பினார். அவரிடம் என்ன வேண்டும் எனக் கேட்டார். 'பணம், தங்கம், வைரம் வேண்டும்' எனக் கேட்டார் ஏழை. அதற்கு அவர் சுட்டு விரலை நீட்ட அங்கிருந்த பீரோ தங்கமானது. ஏழை திருப்தி இல்லாததால் பேசாமல் இருந்தார். அவர் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த பாத்திரங்கள் தங்கமானது. அப்போதும் அவர் பேசவில்லை. மீண்டும் அங்குள்ள துணிகளை தங்கமாக்கினார். அப்போதும் அவர் சிரிக்கவில்லை. சோர்ந்திருந்த ஏழையிடம், “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என ஆண்டவர் கேட்டார். 'அந்த விரல் வேண்டும்' என்றார் ஏழை. இப்படித்தான் பலர் வாழ்கிறார்கள். கிடைப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே மகிழ்ச்சி.