உள்ளூர் செய்திகள்

வேண்டும் நல்லெண்ணம்

மரத்தில் அமர்ந்திருந்த ஜோடிப்பறவைகளை குறிவைத்தான் வேடன். அப்போது அருகில் இருந்த புற்றின் மீது தெரியாமல் கால் வைக்க அதில் இருந்த பாம்பு அவனை கொத்தியது. மகிழ்ச்சியாக இருந்த பறவைகளை கொல்ல முயற்சி செய்தேன். அந்த தீவினை தான் பாம்பு வடிவில் வந்து என்னை கொன்றது என்பதை அறியும்போது அவனது உயிர் பிரிந்தது. வாழும் போது யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழுங்கள். நல்லெண்ணமே நல்ல வாழ்க்கைக்கு நிரந்தர வழி.