கல்லிலே கலைவண்ணம் கண்டார்
UPDATED : ஜன 31, 2023 | ADDED : ஜன 31, 2023
மைக்கேல் என்ற சிற்பி ஒரு கடையின் அருகே சலவைக்கல் இருப்பதை பார்த்தார். கடைக்காரரிடம், ''இந்தக் கல் விற்பனைக்கு உள்ளதா'' எனக் கேட்க, ''இடைஞ்சலாக இருக்கும் இதை நீங்கள் கொண்டுபோங்கள்'' என்றார். சில நாட்களுக்கு பின் அழகிய சிலையுடன் கடைக்கு வந்தார் சிற்பி. அதைக் கண்ட கடைக்காரர், ''இது அழகாக உள்ளதே'' என சொன்னார். “நீங்கள் இடைஞ்சலாக இருக்கிறது என சொன்ன கல்தான் இந்தச் சிலை. எல்லாப் பொருட்களும் பயன் உள்ளதே. ஒவ்வொன்றிலும் ஒரு கலையம்சம் பொதிந்துள்ளது'' என சொன்னார் சிற்பி.