ஆரோக்கிய உறவு
UPDATED : ஜூலை 23, 2023 | ADDED : ஜூலை 23, 2023
அன்று முழுவதும் வேலையில் பரபரப்பாக இருந்தாள் ஜெனிபர். இரவு கவனக்குறைவால் சில கருகிய தோசைகளை சுட்ட அவள் அதை கணவனை சாப்பிட சொன்னாள். அவரும் சாப்பிட்டார். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டாள். துாங்கும் முன் தன் தந்தையிடம் 'கருகிய தோசை பிடிச்சிருந்ததாப்பா' எனக் கேட்டான் ஜான். அதற்கு அவர் 'உங்கம்மாவுக்கு இன்று வேலை அதிகம். அதனால் அவங்க ரொம்ப களைப்பா இருந்தாங்க... இன்று ஒரு நாள் கருகின தோசையை சாப்பிட்டதால் அது என்னை ஒன்றும் செஞ்சிடாது என்றார் அவர்.எல்லோராலும் எப்போதும் சிறந்தவராக இருக்க முடியாது. அப்படி நடந்துகொள்ள முடியாத போது பிறரின் குறைபாடுகளை ஒதுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான உறவிற்கு அடித்தள படிப்பு.