உள்ளூர் செய்திகள்

உன்னோடுதான் நான்...

ஆப்பிரிக்காவிலுள்ள பழங்குடியினரிடம் விசித்திர பழக்கம் ஒன்று இருந்தது. இளவரச பட்டம் ஏற்க வேண்டுமானால்... அவன் காட்டில் உள்ள மிருகங்களை எதிர் கொண்டு மறு எல்லைக்கு வர வேண்டும். அப்போது தான் அவருக்கு பட்டம் சூட்டுவர்.ஒரு முறை மன்னரின் மகனை அவ்வாறு அனுப்பினார்கள். அவன் காட்டின் மறு எல்லையை அடையும் போது ஒரு உண்மையை கண்டான். அவனுக்கு தெரியாமல் அவனுடைய தந்தையானவர் பாதுகாப்பாக வருவதை கண்டார். அப்போது மகனைப்பார்த்து உனது தைரியத்தால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டவர் துன்பமான நேரங்களிலும், கண்ணீர் பாதைகளிலும் நம்மோடு கூட வருகிறார் என்பதில் ஐயமில்லை எனச் சொன்னார். இதை தான் தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்கிறது பைபிள்.