கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!
UPDATED : அக் 10, 2021 | ADDED : அக் 10, 2021
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். அவரைக்காண ஒருவர் வந்திருந்தபோது, அவர் அவசரவேலையாக வெளியே சென்று விட்டார். இதனால் சிறிதுநேரம் காத்திருந்தவர், வெறுத்துப்போய் அவரது வீட்டுவாசலில் 'கழுதை' என எழுதி வைத்து சென்று விட்டார். வீடு திரும்பிய லிங்கன், வந்தவர் யார் என்பதை அங்கு எழுதியிருந்த வாசகத்தை வைத்தே கண்டுபிடித்துவிட்டார். மறுநாள் அவரை சந்தித்த லிங்கன், ''நேற்று நீங்கள் என் வீட்டுக்கு வந்திருந்தீர்கள் போலிருக்கிறது. அதில் உங்கள் பெயர் இருப்பதை வைத்தே கண்டுபிடித்தேன்'' என்று சொன்னார். இதைக்கேட்டவர் அவமானம் தாங்க முடியாமல் கூனிக்குறுகி நின்றார். இதுபோல் யாரையும் அவமரியாதையாக நடத்தாதீர்கள்.