ஆண்டவர் நினைத்தால் எதுவும் நடக்கும்
மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களைக் கூட கர்த்தர் நினைத்தால் காப்பாற்றி விடுவார். உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.இரண்டாம் உலக யுத்தத்தின் போது, கடற்படையில் பணிபுரிந்த வாலிபர் ஒருவர் கப்பலின் விமானத்தளத்தில் இருந்து தன் விமானத்தைக் கிளப்பினார். ஜப்பான் வசம் இருந்த 'சிக்கி ஜிமா' என்ற தீவு நோக்கி செலுத்தினார். விமானத்தில் இருந்தபடியே அந்தத் தீவின் மீது குண்டு வீசி தாக்கினார். அந்த சமயத்தில், ஜப்பானிய தரைப்படையினர் விமானத்தை நோக்கி சுட்டனர். விமானத்தில் தீப்பற்றிக் கொண்டது. அந்த வீரர், பாராசூட் மூலமாக கீழே குதித்தார். அவர் விழுந்ததோ பசிபிக் கடலில்! ஆக, அவர் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பினாலும் கடலில் விழுந்ததால் இறந்து போயிருக்கவே வாய்ப்பு அதிகம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், அந்தப் பகுதியில் பறந்த மற்றொரு விமானத்தில் இருந்து, அந்தக்கடலில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் பின்பேக்' என்ற நீர்மூழ்கிக் கப்பலுக்கு 'ஒரு இளைஞன் கடலில் தத்தளிக்கிறான்' என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மறுநிமிடமே நீர்மூழ்கிக் கப்பல் கடலின் மேற்புறத்திற்கு வந்து, அந்த இளைஞரை விரைந்து சென்று காப்பாற்றியது. நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நுழைந்ததும், அந்த இளைஞர் முழங்காலிட்டு ஜெபித்தார். தன் உயிர் காத்த கர்த்தருக்கு நன்றி தெரிவித்தார். அந்த இளைஞர் யார் தெரியுமா?பின்னாளில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ்புஷ். ''கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்'' என்கிறது பைபிள்.ஆம்..கர்த்தரை உளமாற ஜெபிப்பவர்கள் மரணத்தின் விளிம்பில் கூட கைவிடப்படுவதில்லை.