வாழ்ந்தால் இப்படி தான் வாழணும்
UPDATED : ஜூலை 31, 2023 | ADDED : ஜூலை 31, 2023
பணக்காரர் ரெஜண்ட் கோடக் என்பவர் ஜப்பானில் வாழ்ந்தார். எல்லோரிடமும் இனிமையாக பழகுவார். பலருக்கும் உதவி செய்வார். திடீர் என ஒருநாள் உடல் நலம் குன்றி இறந்தார். அதைக் கேள்விப்பட்ட முதியவர்கள் பலர் 'மகனே' என்றும், அவர் வயதை ஒத்தவர்கள் 'சகோதரனே' என்றும், பெற்றோரை இழந்தவர்களைப் போல சிறுவர்களும் அழுதனர். கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் 'வாழ்ந்தால் இப்படித்தான்யா வாழணும்' என கண்களில் நீர்ததும்ப பெருமிதத்தோடு கூறினார்.