உள்ளூர் செய்திகள்

உடனுக்குடன்...

விஞ்ஞானி எடிசன் அறிவியல் மட்டுமின்றி கணிதத்தில் புலி. எந்த கேள்வியாயினும், செயலாயினும் உடனுக்குடன் தீர்வு காண்பதில் புத்திசாலி. ஒரு முறை அவரது கண்டுபிடிப்பு ஒன்றிற்கு காப்புரிமை பெற நிறுவனம் ஒன்று 'லட்சம் டாலர்' தருவதாக சொன்னது. அதைக்கேட்ட எடிசன், தங்களிடமே அந்த தொகை இருக்கட்டும். காப்புரிமையை உங்களுக்கே தருகிறேன் என்றார். மகிழ்ச்சி அடைந்தது நிறுவனம். அதற்குள் அவர், ஆண்டுக்கு ஆறாயிரம் டாலர்கள் வீதம் 17 ஆண்டுகள் கொடுங்கள் என்றார் எடிசன். அவரது பதிலை கேட்டு (6000x17 = 1,02,000) பெருந்தன்மையையும் புத்திசாலிதனத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டது நிறுவனம்.