பிறர் நலம் காப்போம்
UPDATED : ஜன 30, 2023 | ADDED : ஜன 30, 2023
கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் தத்துவஞானி சாக்ரட்டீஸ். தன்னிடம் சீடனாக சேருவோரிடம், குளத்தை காட்டி 'இதில் நீ என்ன காண்கிறாய்' என கேட்பார். அதற்கு சரியாக பதில் சொல்பவரே சீடன். ஒருநாள் இதற்கான காரணத்தை கேட்டான் சீடன் ஒருவன். அதற்கு சாக்ரட்டீஸ், ''உலகில் இரண்டு விதமான மனிதர்கள் உண்டு. அவர்கள் கூறும் பதிலால், அவர்களின் குணத்தை அறிந்து கொள்வேன். முதலாம் மனிதர்கள், 'குளத்தில் வாழும் மீன்களையும், செடிகளையும் காண்கிறேன்' என்பர். இரண்டாம் மனிதர்களோ, 'குளத்தில் என் பிம்பத்தைப் பார்க்கிறேன்' என சொல்வர். இதில் இரண்டாமவர் தன்னைக் குறித்தே சிந்திப்பர். 'தான்' என்ற அகங்காரம் கொண்ட இவர்களால், யாருக்கும் பயன் இருக்காது'' என்றார். 'அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக' என்கிறது பைபிள்.