கீழ்படிதல் நன்று
UPDATED : ஏப் 06, 2023 | ADDED : ஏப் 06, 2023
செல்வந்தர் கொடுத்த விளம்பரத்தை கண்டு வேலைக்கு பல இளைஞர்கள் வந்தனர்.இரண்டு நாட்கள் அவர் சொன்ன வேலையை செய்த பலர் மறுநாள் வருவதை நிறுத்திக் கொண்டனர். அதில் இளைஞர் ஒருவர் மட்டும் வந்தார். ஒரிடத்தில் குவிந்திருந்த கற்களை எடுத்து மாற்றி மாற்றி குவிக்கச் சொன்னார். இப்படி ஒரு வாரம் நடந்தது. இளைஞனிடம் அந்த வாரத்திற்கான கூலியை கொடுத்து ஞாயிற்றுக்கிழமையான நாளை உனக்கு விடுமுறை என்றார் செல்வந்தர். திங்கள்கிழமை சரியான நேரத்திற்கு வேலைக்கு வந்த இளைஞனை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனை அழைத்து அவனுடைய படிப்பு, திறமைக்கு தகுந்த வேலையை கொடுத்து வசதியாக வைத்துக் கொண்டார் செல்வந்தர். முழுமையான கீழ்படிதல் ஒருவரை முன்னேற்றப்பாதையில் முன்னிலைப்படுத்தும்.