சந்தர்ப்பம்
UPDATED : மார் 27, 2023 | ADDED : மார் 27, 2023
அலெக்சாண்டர் ஒரு கலைக்கூடத்தில் சிற்பங்களை பார்வையிட சென்றார். அங்கு முகத்தை மூடிய படியும், கால்களில் இறக்கைகளுடன் கூடிய சிற்பம் வித்தியாசமாக இருப்பதைக் கண்டார். அதன் பெயர் என்ன என்று சிற்பியிடம் கேட்டார். இதன் பெயர் சந்தர்ப்பம் என்றார். இது ஏன் இவ்வாறு உள்ளது என்று கேட்க,'' மனிதர்கள் சரியான குறிக்கோள் இன்றி, சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை விட்டுவிடுகின்றனர். ஒரு முறை கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மறு முறை கிடைக்காது. அது பறந்து விடும் என்பதை விளக்கத்தான் இவ்வாறு செதுக்கியுள்ளேன்'' என்றார் சிற்பி.