பொறுமையும் பொறுப்பும்
UPDATED : மார் 09, 2023 | ADDED : மார் 09, 2023
பணக்காரப்பெண் ஒருவர், ஏழையை காதலித்தாள். தந்தையிடம் அவளின் விருப்பத்தை சொல்ல அவரோ பையனை வரச்சொன்னார். அதன்படியே வந்த அவனை சோபாவில் உட்காரக்கூட சொல்லாமல் உள்ளே சென்றார் பெண்ணின் தந்தை. பொறுமையிழந்த அவனோ அருகில் சிதறியிருந்த துடைப்பத்தை துண்டு துண்டாக உடைத்தார். சிறிது நேரத்தில் அங்கே வந்த அவர் உனக்கு பொறுமையும் பொறுப்பும் இல்லாததால் என் மகளை உனக்கு எப்படி தருவேன் எனக் கேட்டார். தலை குனிந்து வெளியே சென்றான் அவன்.